மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட ரோஜா

சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவிகளுடன் மந்திரி ரோஜா நடனமாடினார்.
திருப்பதி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக ரோஜா உள்ளார். இந்த நிலையில், திருப்பதியில் சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மந்திரி ரோஜா கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியை கண்டு களித்தார். கலை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த மந்திரி ரோஜா திடீரென மேடை ஏறி மாணவிகளுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி அசத்தினார்.
நடனம் ஆடி விட்டு இறுதியில் மந்திரி ரோஜா கைகளால் மாணவிகளை நோக்கி முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மாணவிகளுடன் சேர்ந்து மந்திரி ரோஜா நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Post

விஜயகாந்த் காலமானார் (நேரலை)
நேரலையாக பார்க்க தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 26 ஆம் திகதி தனியார் மருத்துவமனையில் [...]

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வந்த ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஆண்ட்ரியா இன்றையதினம் யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு [...]

விமான விபத்தில் நூலிழையில் தப்பிய ரோஜா – வெளியான பரபரப்பு தகவல்
விமான விபத்தில் இருந்து நடிகை ரோஜா மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக இந்திய தகவல்கள் [...]