ட்விட்டரின் அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன


ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டடங்களும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடப்படும் என அதன் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) மீண்டும் திறக்கப்படும் என அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான காரணத்தை ட்விட்டர் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், நேற்று மாலை ஊழியர்களை அலுவலகத்திலிருந்து வெளியேற்றத் தொடங்கியுள்ளனர் என்றும் ஒரு தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் இரகசிய தகவல்களை ஊடகங்கள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு ட்விட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், ட்விட்டரின் புதிய உரிமையாளரான, உலகின் மிகப்பெரிய செல்வந்தர் இலோன் மஸ்க், அந்நிறுவன ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளார்.

ட்விட்டர் ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் ஒரு நாளைக்கு அதிக மணிநேரம் வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இது தொடர்பான உறுதிமொழியை வழங்க சம்மதிக்க வேண்டும் என மஸ்க் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உறுதிமொழிக்கு உடன்படாத ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கி சேவையிலிருந்து வெளியேறப்படுவர் என்று மஸ்க் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *