1,000 கி.மீ தொடர்ந்து பயணிக்கும் அதிநவீன எலக்ட்ரிக் கார்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

ஆயிரம் கிலோ மீட்டர் வரை தொடர்ந்து பயணிக்க கூடிய “Vision EQXX” என்ற புதிய அதிநவீன எலக்ட்ரிக் காரை ஜெர்மன் நாட்டை சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற நுகர்வோர் மின்னணு கண்காட்சியில், இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1,750 கிலோ எடை கொண்ட இந்த கார் தான், சந்தையில் உள்ள எலக்ட்ரிக் கார்களிலேய மிகக் குறைந்த எடை கொண்டதாகும்.

இதன் பேட்டரி செயலிழந்தால் உடனடியாக உதவிடும் வகையில், காரின் மேற்கூரையில் 117 சோலார் செல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக செல்லும் வகையில் சூரிய மின்சக்தி கிடைக்கும்.

இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோ மீட்டர் வரை தொடர்ந்து பயணிக்கலாம். காரில் உள்ள பெரிய கண்ணாடி திரையில் வீடியோக்களையும், 3-டி முறையிலான பாதையின் ஜிபிஎஸ் காட்சிகளையும் காண இயலும்.

இதன் வேகத்திற்கு உதவிடும் வகையில், குறைந்த எடையும், புவியீர்ப்பு விசைக்கேற்ற இலகுவான வடிவமைப்பும், இந்த காரை ஒரு தலைச்சிறந்த படைப்பாக கொண்டு வந்துள்ளது, என மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.