இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவினால் குறைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
மற்றைய பேக்கரி பொருட்களின் விலையை 10 ரூபாவினால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.