யாழில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி

யாழ்ப்பாணத்தில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதால் மீனவர்கள் நாளாந்தம் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் சந்தைகளுக்கு கூடுதலான கடலுணவுகள் கிடைக்கப்பெறுகின்றன.
அதைவிட தற்போது கௌரிவிரதம் நடைபெறுவதால் அநேகமானோர் கடலுணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.
இதன் காரணமாகவே மீன்களின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
இதன்படி கடந்த வாரம் கிலோ ஆயிரம் ரூபாவாக விற்கப்பட்ட மீன் தற்போது கிலோ 600 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
Related Post

எரிவாயுவின் விலை அதிகரிக்க வாய்ப்பு
எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என [...]

யாழில் தீவிரமடையும் கொரோனா – விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் [...]

அடிக்கடி இன்று மழை பெய்யும்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் [...]