ஆடைகளை களைந்து சோதனை செய்த ஆசிரியை – தீக்குளித்த மாணவி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் உள்ள பெண்கள் பாடசாலையில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி,பரீட்சை எழுதுகையில், மாணவியின் சீருடையில் காகிதச் சீட்டுகளை மறைத்து வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட ஆசிரியர், வகுப்பறைக்கு அருகே உள்ள அறைக்கு மாணவியை அழைத்து சென்ற ஆடையை கழற்றி சோதனையிட்டுள்ளார்.

மாணவி எதிர்ப்பு தெரிவித்தும் ஆடையை கழற்றி சோதனை செய்துள்ளார். இந்நிலையில், ஆசிரியை தன் உடைகளை கழற்றி சோதனை செய்ததால் மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மன உளைச்சலில் வீட்டிற்கு வந்த அந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். தகவல்களின்படி, சிறுமிக்கு 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், பெண் கண்காணிப்பாளர் தன்னை அவமானப்படுத்தியதாகவும், தனது சீருடையில் காகிதச் சீட்டுகளை மறைத்து வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய ஆடைகளை கழற்றச் செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர் .