மொட்டா நிறுவனத்தின் முகநூல், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் திடீரென 30 நிமிடங்களுக்கு மேலாக முடங்கியிருந்தன.
குறித்த சமூக வலைதளத்தின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வந்தது.
முகநூல் செயலிக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போது, வாட்ஸ்ஆப் செயலிக்கு OTP அனுப்பப்படுவதாக குறுந்தகவல் வருகின்ற போதிலும், OTP குறுந்தகவல் வாட்ஸ்ஆப் கணக்குகளிற்கு அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது முகநூல் மற்றும் இன்ஸ்ராகிராம் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
எனினும் திடீரென இரு சமூக வலைதளங்களுக்கும் முடக்கத்திற்கான காரணம் மொட்டா நிறுவனத்திடம் இருந்து இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.