அலவாங்கினால் கொடூர தாக்குதல் – கணவன் பலி, மனைவி படுகாயம்

அயல் வீட்டாருடன் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் கணவன், மனைவி மீது அலவாங்கினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 50 வயதான கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து கணவனும் அவரது மனைவியும் அலவாங்கால் தாக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
அலவாங்கு தாக்குதலுக்கு இலக்கான நபர், ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த அவரது மனைவி நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி – இகுறு ஓயா பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related Post

அமெரிக்காவில் இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் [...]

யாழ் உடுப்பிட்டியில் கணவன், மனைவி மீது வாள்வெட்டு – நகைகள் கொள்ளை
வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை , வீட்டிற்கு அருகில் [...]

களுத்துறையில் தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் இளம் தாய்
உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் தாயும் அதனை அணைக்கச் சென்ற [...]