வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்றைய தினம்(24) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கிரிஜைகள், வசந்தமண்டப பூஜை என்பன இடம்பெற்று 8.45 மணிக்கு கொடியேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில் வலம்வந்தார்.
ஒக்டோபர் 1ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும் ஒக்டோபர் 2ம் திகதி வெண்ணைத் திருவிழாவும்
ஒக்டோபர் 3ம் திகதி துகில் திருவிழாவும் ஒக்டோபர் 4ம் திகதி
பாம்புத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
கம்சன் போர்த்திருவிழா ஒக்டோபர் 5ம் திகதியும் வேட்டைத்திருவிழா ஒக்டோபர் 6ம் திகதியும் சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ம் திகதியும்
தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும்
இடம்பெறவுள்ளது.
கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதி காலையும்
அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும்.
Related Post

Starlink இணைய சேவைக்கு இலங்கை அனுமதி
இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நாட்டில் இணைய சேவைகளை வழங்குவதற்காக எலோன் [...]

மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பம் – இளைஞன் கைது
15 வயது சிறுமியை 3 மாத கர்ப்பணியாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை [...]

ரணிலின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது நியாயமில்லை – கொந்தளிக்கும் அங்கஜன்
பிரதமர் ரணி்ல் விக்கிரமசிங்க அவரின் தனிப்பட்ட வீடு தீக்கிரையக்கப்பட்டது் நியாயப்படுத்த முடியாதது என [...]