Starlink இணைய சேவைக்கு இலங்கை அனுமதி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) நாட்டில் இணைய சேவைகளை வழங்குவதற்காக எலோன் மஸ்க்கின் Starlink நிறுவனத்திற்கு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளது என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த இராஜாங்க அமைச்சர், பொதுமக்களின் ஆலோசனைக்குப் பிறகு ஒப்புதல் வழங்கப்படும் என்றார்.பொது கலந்தாய்வுக்கு 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளோம்.

அதன் பின்னர் பிரச்சினைகளை ஆராய்ந்து அனுமதி வழங்குவோம்” என்று ஹேரத் கூறினார்.ஸ்டார்லிங்க், 2015 ஆம் ஆண்டு முதல் Musk இன் நிறுவனமான SpaceX ஆல் உருவாக்கப்பட்டது,

இது பூமியின் மிகத் தொலைதூரப் பகுதிகளுக்கும் அதிவேக இணையத்தை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு பரந்த செயற்கைக்கோள் அமைப்பாகும்.

கடந்த மாத இறுதியில் இந்தோனேசியாவின் பாலியில் நடந்த 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தின் ஓரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஸ்க்கைச் சந்தித்த பின்னர் Starlink இணையச் சேவை இலங்கையில் கவனத்தைப் பெற்றது.

மே 19 அன்று அவர்களது சந்திப்பைத் தொடர்ந்து, ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்த விக்கிரமசிங்க உறுதியளித்தார்.