இலங்கை கைதிகள் தமிழகத்தில் திடீர் போராட்டம்

தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கைதிகள் , நீதிமன்றத்தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
நீதிமன்றத்தில் காவல்துறை வேனில் இருந்து இறங்கி அவர்கள் திடீரென அங்கே உட்கார்ந்து மறியிலில் ஈடுபட்டதுடன் தங்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தங்களிடம் பறித்த அனைத்து செல்போன்களையும் திரும்ப கொடுக்க வேண்டும் எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
பணம் கேட்கும் அதிகாரிகள்
இதனை தொடர்ந்து அவர்களுக்கு வாய்தா கொடுக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சிறப்பு முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பத்திரிகையாளர்களை நோக்கி எங்களிடமிருந்து பறிமுதல் செய்த செல்போனில் தரப்படவில்லை.
மேலும், விடுதலை செய்வதற்காக எங்களிடம் கியூப் பிரான்ச் பிரிவை சேர்ந்த சிவக்குமார், ஆஐ ரவி ஆகியோர் எங்களிடம் பணம் கேட்கிறார்கள். இதுபோல் ஏற்கனவே 21 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து எங்களிடம் பணம் கேட்டு வருகின்றனர்.
எனவே இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.புது வழக்குகள் போட்டு எங்களை தொடர்ந்து ரிமாண்ட் செய்து வருகின்றதாகவும் கைதிகள் கூறியுள்ளனர்.
செல்போன்கள் லேப்டாப்புகள் பறிமுதல்
திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள், இந்தோனேசியா தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மத்திய புலனாய் அமைப்பை சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு (NIA) அதிகாரிகள் திடீர் சோதனயில் ஈடுபட்ட நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் லேப்டாப்புகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் அவற்றினை மீள தெருமாறு கோரி கைதிகள் போராட்டத்தில் ஈருபட்டு வருகின்றனர்.