9 வயது சிறுமி கொலை – 16 வயது சகோதரி மீது கொடூர தாக்குதல் – தந்தை மற்றும் தாய் கைது
16 வயதான மகளை மூர்க்கத்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் காலி கடுகொட என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஆசிரியைகள் இருவரின் ஒத்துழைப்புடன் சிறுமி பொலிஸாரிடம் முறையிட்டிருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி காப்பாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சிறுமியின் இளைய சகோதரியான 9 வயது சிறுமிக்கு நோய் குணப்படுத்துவதாக கூறி அடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம்
சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு உதவி வழங்கியதாக கூறி, சிறுமியின் தாயார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் குறித்த சிறுமி, தந்தை மற்றும் அவரது பாட்டியுடன் வசித்து வந்துள்ள நிலையில், அவர் நீண்ட காலமாக தந்தையினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுமி நீதிமன்ற உத்தரவின் படி, காலி கித்துல்பிட்டி சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான தந்தை, காலி நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.