ஏமாற்றி பணம் பறித்த நடிகர் பிரசாந்த் – இலங்கை தமிழ் பெண் குற்றச்சாட்டு


சுவிட்சர்லாந்தில் விமான ஊழியராக பணியாற்றி வரும் பெண்ணுடன் நட்புக் கொண்ட நடிகர் பிரசாந்த் அவரிடம் ரூ. 10 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறித்து விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் வைத்துள்ளார்.

சென்னையிலுள்ள பாண்டிபஜார் காவல் நிலையத்தில் குறித்த பெண் மீது நடிகர் பிரசாந்த் தரப்பும் முறைப்பாடு கொடுத்துள்ளது.

மேலும், குறித்த பெண் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் வேண்டுமென்றே பெயரைக் கெடுக்க செய்யும் சதி என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

திடீரென சுவிட்ஸர்லாந்தில் விமான ஊழியராக வேலை பார்க்கும் பெண் ஒருவர் நடிகர் பிரசாந்த் மீது இப்படியொரு புகாரை சுமத்தியிருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்துமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதே வேளை 40 வயதான குமுதினி திருமணமானவர் எனவும் பிரசாந்தின் தீவிர ரசிகையான இவர் சுவிஸ் விமான நிலையத்தில் கடமையாற்றும் போது அங்கு வந்த பிரசாந்துடன் நட்பாகி உடல் ரீதியான தொடர்புகளை பல காலம் வைத்திருந்தவர் எனவும் பல தடவை இந்தியா வந்து பிரசாந்துடன் இருந்து போனவர் எனவும் தமிழக ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.

இருப்பினும் இந்த தகவல்கள் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *