பளையில் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் நேற்று (18) வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
பளை பிரதேச இத்தாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வெடிபொருட்கள் வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டது.
பின் குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்ட போது 910கிராம் வெடிமருந்து கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டும் நல்ல நிலையில் மூன்று மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
குறித்த நபரை கைது செய்த பளை பொலிசார் இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.