மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டில் மேலும் 162 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 667,735 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.