கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகளுக்காக மேற்கொள்ளவுள்ள திட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்கொலைகள் மற்றும் சிறுவயதில் கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்நிலை மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சு சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி மனநல நிபுணர்கள் மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கும் விசேட வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
குறிப்பாக பாடசாலை படிப்பை முடிக்கும் முன், பெண் பிள்ளைகள் ஆண்களுடன் சேர்ந்து வாழும் போக்கு அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் கூறினார்.
இதனால் இம்மாவட்டத்தில் சிறுவயதில் பெண் பிள்ளைகள் கர்ப்பம் தரிக்கும் நிலை அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குறைபாடுகளை கண்டறிந்து அவற்றுக்கான விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட குழுவொன்று வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளது.
Related Post

யாழில் பிக்மி(Pick me) சேவைக்கு எதிராக முச்சக்கர வண்டி சாரதிகள் கண்டனப் பேரணி
யாழில் முச்சக்கர வண்டி சாரதிகள் இன்றையதினம் கண்டனப் பேரணியொன்றை மேற்கொண்டனர். இது தொடர்பில் [...]

தனியாக இருந்த 20 வயது பெண் தற்கொலை – மூவர் கைது
தன்னுடைய காதலி மரணிக்கவில்லையென நினைத்து, அவரை தன்னுடைய நண்பனின் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு [...]

எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய கார்
அளுத்கம காவல் நிலையத்திற்கு அருகில் அளுத்கம நோக்கிச் சென்ற வைத்தியர் ஓட்டிச் சென்ற [...]