ஐ.நா. தளங்கள் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் – 19 பேர் பலி
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கே உள்ள பெனியில் ஐ.நா.வுக்கு எதிரான மோசமான போராட்டங்களுக்கு மத்தியில், ஐ.நா. தளம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) இந்த தாக்குதல்களால், குறைந்தது இரண்டு அமைதி காக்கும் தளங்களும் குறிவைக்கப்பட்டன.
கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஐ நா எதிர்ப்பு போராட்டங்களைத் தொடர்ந்து நடந்த வன்முறை மோதல்களில், மூன்று ஐ. நா அமைதி காக்கும் படையினர் உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர்.
கிழக்கில் இயங்கும் ஆயுதக் குழுக்களுக்கு எதிராக ஐ.நா பொதுமக்களை பாதுகாக்கவில்லை. என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.