அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் வாய்ப்பு
சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.