Day: May 26, 2023

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்புஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (26) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாவாகவும் விற்பனை விலை 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. [...]

கைகள் கட்டப்பட்டு மர்மமான முறையில் படுகொலைகைகள் கட்டப்பட்டு மர்மமான முறையில் படுகொலை

கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டில் குறித்த நபர் தனியாக வசித்து வந்தமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. உயிரிழந்த [...]

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்க தீர்மானம்எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்க தீர்மானம்

தற்போதைய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அடுத்த மாத எரிபொருள் விலை திருத்தம் முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலிய [...]

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறைசிறுமியை துஷ்பிரயோகம் செய்த இராணுவ சிப்பாய்க்கு கடூழிய சிறை

பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட [...]

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறைபாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

நாட்டில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (26) முதல் அடுத்த மாதம் 12 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை [...]

யாழ் நகர் பகுதியில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்யாழ் நகர் பகுதியில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று (25) இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. [...]

பல தடவைகள் மழை பெய்யும்பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் [...]