பிரபல நடிகர் சக்ரவர்த்தி காலமானார்
தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் நடிகர் சக்ரவர்த்தி நேற்று அதிகாலை மும்பையில் காலமானார்.
சிவாஜி, ரஜினி, கமல் என பல கதாநாயகர்களுடன் நடித்தவர் நடிகர் சக்ரவர்த்தி.
“ரிஷி” படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவர் சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.