ரயில்வே ஊழியர்களுக்கு ஆப்பு வச்ச போக்குவரத்து அமைச்சர்

பணிப்பகிஷ்கரிப்பின் போது பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் “சேவையில் இருந்து விலகியதாக கருதும்” கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை கடைப்பிடிக்காது பணிப்புறக்கணிப்பில் ஈடும் ரயில் நிலைய அதிபர்களுக்கு இந்த கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று (11) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்களுக்கு ரயில்வே பொது முகாமையாளரால் அந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.
Related Post

மகிந்தவிடமே தலதா மாளிகை தங்கம் வெளியான தகவல்
தலதா மாளிகைக்கு சொந்தமான 50 கோடி ரூபா மதிப்புள்ள தங்கமும், ஒன்பது கோடி [...]

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் பலி, மற்றும் ஒருவர் காயம்
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றும் [...]

மன்னார் கட்டுக்கரையில் மீன் பிடி வள்ளம் நீரில் மூழ்கி ஒருவர் பலி
மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(2) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் [...]