ஆன்மிக நிகழ்ச்சியில் 116 பேர் பலி

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் சத்சங் என்ற ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 116 உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். கூட்ட நெரிசலில் சிக்க மயக்கமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அவர்களின் குடும்பத்திற்கு இந்திய ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.