நாணயத் தாள்களை பயன்படுத்த வேண்டாம் – மத்திய வங்கி எச்சரிக்கை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

அலங்காரப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புப் பொருட்களை தயாரிப்பதற்கும் சமூக வலைத்தளங்களூடாக அத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் நாணயத் தாள்களை பயன்படுத்தும் போக்கு காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக மத்திய வங்கி குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சபையின் அனுமதியின்றி பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எந்தவொரு நபரும் தவறொன்றை புரிகின்றார் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

பின்வரும் குற்றத்தில் குற்றத்தீர்ப்பின் படி எந்தவொரு நபரும் 25 மில்லியன் ரூபாய்க்கு மிகாமல் அபராதம் அல்லது மூன்றாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது நீதிமன்றத்தின் முன் தண்டனையின் அடிப்படையில் இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது..

எனவே, மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது.