யாழில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் பலி
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த தங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பேருந்தில் இறங்க முற்பட்ட வேளை பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்தியமையால் , தவறி விழுந்துள்ளார்.
அதில் படுகாயமடைந்தவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.