மட்டக்களப்பில் அரச பேருந்து மீது தாக்குதல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை வழியாக அக்கரைப்பற்று செல்லும் பேருந்து வண்டி மீது தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தாக்குதல் சம்பவத்தால் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனையிலிருந்து திங்கட்கிழமை காலை மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து வண்டி மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் 18 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து அதிகாலை 5.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பஸ் வண்டியின் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை கேடான தாக்குதலால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிகாலை வேளையில் பயணம் செய்த பிரயாணிகள் பெரிதும் அசெளகரியத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

இலங்கையில் கர்ப்பிணி பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தல்
அடுத்த 2-3 மாதங்களில் இலங்கையில் அதிகமான மருந்துகளின் கையிருப்பு தீர்ந்து விடும் என்று [...]

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் – ஜனாதிபதி முன்னிலையில் சம்மந்தன் காரசாரம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தொியும். ஆனால் என்ன நடந்தது என்பதை [...]

மல்லாவியில் ஆணின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு, மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயல் பகுதியில் இருந்து சடலம் ஒன்று [...]