திடீரென நிறம் மாறிய கடல் – அச்சத்தில் மக்கள்

வெலிகம நகரை சூழவுள்ள கடற்பரப்பில் கடல் அலைகளின் இயற்கையான நிறம் இன்று மாற்றமடைந்துள்ளது.
திடீரென கடல் அலைகள் கரும்பழுப்பு நிறமாக மாறியுள்ளதாக சுற்றுவட்டார மக்கள் தெரிவித்தனர்.
இந்த திடீர் மாற்றத்தால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திடீர் மாற்றம் குறித்து நாரா நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி உபுல் லியனகேவிடம் விளக்கம் கோரப்பட்டது.
சமகாலத்தில் மழையுடன் காலநிலை நிலவுவதால், நீரோட்டங்கள் மாறி, பாசிகள் அதிகரித்தமையால் கடல் அலைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, இது போன்ற நிலை உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் யாரும் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டால் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவிப்பின்றி [...]

யாழ் ஆனைப்பந்தியில் விபத்து – பல்கலைக்கழக மாணவன் பலி
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் [...]

38 இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக [...]