இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – யாழில் போராட்டம்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை (14.08.2023) இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது.
குறித்த பகுதியில் இடம்பெறும் மண் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த இராணுவத்தினரின் உதவி தேவை பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்ட கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
தற்போது இருக்கின்ற இராணுவ முகாம் அகற்றப்பட்டாலும் இதே பகுதியில் இருக்கும் அரச காணி ஒன்றில் இராணுவ முகாமை அமைத்து இந்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Post

தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியம்
தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க [...]

மன்னார் நீதிமன்ற காவலில் இருந்த வாகனத்தில் 116 கிலோ கஞ்சா மீட்பு
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் [...]

இந்தியப் பெருங்கடலில் 39 பேருடன் கவிழ்ந்த சீன கப்பல்
39 பணியாளர்களுடன் சீன மீன்பிடிக் கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத் [...]