யாழில் நகைக்கடை உரிமையாளரின் மனைவி போதைப் பொருளுடன் கைது

யாழ்.நகரிலுள்ள உள்ள நகைகடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மனைவியை பொலிஸ் நிலையத்திற்குப் பார்க்கவந்த கணவன் பொலிஸ் நிலையத்தில் வைத்து மனைவியை சரமாரியாக தாக்கிய நிலையில் கணவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை – பழம் வீதி பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயது டைய பெண் ஒருவர்
இன்றைய தினம் யாழ்.மாவட்டபொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து
80மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட பெண் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
Related Post

முச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம்
கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள், சட்டவிரோத மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, நாட்டிலுள்ள [...]

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி
யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் [...]

உணவு வகைகளின் விலைகள் குறைப்பு
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, (01) முதல் 10 [...]