விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதியை ஐக்கிய அரபு கௌரவப்படுத்தியுள்ளது.
அமீரக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.
சமீபத்தில் நடிகை திரிஷா, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
Related Post

வசூல் சாதனையை முறியடித்த “விக்ரம்”
தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வருகிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம். லோகேஷ் [...]

தொகுப்பாளராக களமிறங்கும் கங்கனா ரனாவத்
பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே தற்போது ஏக்தா கபூர் தயாரிப்பில் “லாக்கப்” என்ற நிகழ்ச்சி [...]

பிக் பாஸ் 7ல் களமிறங்கும் போட்டியாளர்கள் – முழு விவரம்
[...]