வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கையின் வடகிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.
இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில்
நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது திருகோணமலை கடற்பரப்பில் இருந்து தென் கிழக்கில் 470 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதோடு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள்
ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறும் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Post

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை சற்று அதிகரிக்கும்
செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்கு [...]

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் [...]