பெண்ணுக்காக துப்பாக்கிச்சூடு – ஒருவர் துப்பாக்கியுடன் கைது

ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேக நபர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
சந்தேகநபரின் துப்பாக்கி வவுலுகல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணி ஒன்றில் வைக்கோல் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
Related Post

யாழில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இடம் பெற இருக்கும் பேரணி
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை [...]

பளை – இயக்கச்சியில் தென்னம் தோட்டத்திற்கு தீ வைத்த விஷமிகள்
பளை – இயக்கச்சி பகுதியிலுள்ள காணி ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் தீ மூட்டியதில் [...]

தாக்குதலுக்கு திட்டமிடும் தமிழீழ விடுதலை புலிகள் – இந்திய புலனாய்வு அமைப்பு
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு ஒன்றிணைவதாக [...]