வவுனியா கற்பகபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்த சந்தேக நபர் கைது

17ம் திகதி மாலை இடம்பெற்ற குறித்த முற்றுகை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா கற்பகபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைவாக வவுனியா மது ஒழிப்பு காவற்துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
அப்பகுதியை சுற்றிவளைத்த காவற்துறையினர் இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த ஒரு பெரல் ‘கோடா’ , கசிப்பு உற்பத்தி மேற்கொள்ள பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியனவும் கைப்பெற்றப்பட்டதுடன் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தகற்பகபுரம் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரையும், மீட்கப்பட்ட உபகரணங்களும் வவுனியா காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
Related Post

யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்ற சங்கத்தின் தலைவர் இறைபதமடைந்தார்
யாழ்.வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அ.குணபாலசிங்கம் தனது 77வது வயதில் [...]

வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பில் மனைவியிடம் தொடர் விசாரணை
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. [...]

கிளிநொச்சியில் காரில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு
கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்றைய தினம் இரவு 12.40 மணியலவில் [...]