யாழ் விமான நிலையம் மீண்டும் ஆரம்பம்

கொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானச் சேவைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (05) பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான பலாலி சர்வதேச விமான நிலையமும் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி திறக்கப்பட்டது.
பின்னர், கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதன் செயல்பாடுகளை இடைநிறுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
Related Post

5 வயது சிறுமி மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்
வெல்லவாய- பள்ளிவாசலுக்கு பின்புறமாக பெற்றோருடன் வசித்து வந்த சிறுமியாருவர் நேற்று (10) காணாமல் [...]

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்துக்கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் சிக்கி [...]

நடு வானில் மோதிக்கொண்ட விமானங்கள் (காணொளி)
அமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுடன் மோதி [...]