யாழில் பாண் வியாபாரி மீது கொடூர தாக்குதல்
யாழ்ப்பாணம் சுழிபுரம் – காட்டுப்புலத்தில் பாண் விற்பனை செய்யும் வாகனம் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியில் உள்ள வெட்டுப்பாண் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகள்
சுழிபுரம் பகுதிக்கு வாகனத்தில் கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பானை விற்பனை செய்த வாகனம் மீது
வாகன சாரதியும் விற்பனையாளருமான குறித்த இளைஞனை, முகத்தில் கறுப்புத் துணியால் கட்டி மூன்று பேர் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.