இலங்கையில் அதிசய தென்னை மரம்


அனுராதபுரம் மாவட்டம் – கலத்னேவ பிரதேசத்திலலுள்ள வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் தேங்காய் காய்த்துள்ள சம்பவம் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரிய சம்பவத்தை கலத்னேவ மிஹிந்து மாவத்தையில் வசித்து வரும் ஈபட் பெரேரா என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்திலேயே காணமுடிந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈபட் பெரேரா,

எனது வீட்டுக்கு பின்னால், இருக்கும் வீட்டுத் தோட்டத்தில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு பின்னரே நான் தோட்டத்திற்கு சென்றேன்.

அப்போது தென் மரத்தின் தண்டில் தேங்காய் காய்த்திருப்பதை கண்டேன். மரத்தினை பார்க்கும் போது அனைத்து இடங்களிலும் தென்னம் பாளைகள் முளைத்து காய் காய்க்க ஆரம்பித்துள்ளது.

இந்த தென்னை பயிரிட்டு தற்போது 5 வருடங்கள் ஆகின்றது.

ஏனைய மரங்களில் அப்படியான நிலைமைகள் எதுவுமில்லை. இந்த ஒரு தென்னை மரத்தில் மாத்திரமே வித்தியாசமாக தேங்காய் காய்த்துள்ளதை காணமுடிகிறது எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *