இரு நபர்களுக்கிடையில் மோதல் – வயோதிபர் கொலை

இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொல்லால் தாக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கொழும்ப – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் உடக பிரிவு தொிவித்துள்ளது.
வத்தளை-ஹூனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது வயோதிபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

வடக்கின் இருதய சிகிச்சை மேம்பாட்டுக்காக காணி கொள்வனவு
வடக்கின் இருதய சிகிச்சை மேம்பாட்டுக்காக சர்வதேச தரம்வாய்ந்த நிலையத்தை உருவாக்குவதற்கான காணியை அண்மையில் [...]

பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. [...]

நாட்டு மக்க்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாட்டில் ஒமிக்ரொன் திரிபுடன் அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் [...]