- மேஷம்மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.
- ரிஷபம்ரிஷபம்: மனம் விட்டு பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். நல்லன நடக்கும் நாள்.
- மிதுனம்மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
- கடகம்கடகம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினைகள் அவ்வப்போது மனசை வாட்டும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
- சிம்மம்சிம்மம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும் . உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும். புகழ் கௌரவம் கூடும் நாள்.
- கன்னிகன்னி: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் லாபம்வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.
- துலாம்துலாம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.
- விருச்சிகம்விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக விமர்சனங்களும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
- தனுசுதனுசு: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
- மகரம்மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
- கும்பம்கும்பம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் பெறும் நாள்.
- மீனம்மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.