இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

வெப்பமான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (23) உடல் வெப்பநிலை அதிகளவு உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பச் சுட்டெண் அதிகமாக இருக்கும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எனவே முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகளை வெளிப்புறங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன் பொதுமக்கள் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.