நாட்டில் இன்றும் பலத்த மழை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டில் மழையின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும்.

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் சில இடங்களில் சமார் 100 மில்லி மீற்றர் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.