யாழ்ப்பாணம் வீதியில் இருந்து கே கே எஸ் வீதியில் மோட்டார் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர் தாவடி உப்புமடம் பிள்ளையார் சந்தியில் முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் கதவை திறந்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார் வண்டி மோதி விபத்துக்கு உள்ளானது.
சம்பவ இடத்திலேயே மோட்டார் வண்டியை ஓடி வந்தவர் உயிரிழந்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுன்னாகம் பொலீசார் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்