இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்திற்கு 125 லீட்டர் எரிபொருள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.