எறும்பின் உண்மையாக முகத்தோற்றம் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான நிக்கோன் ஸ்மால் வோர்ல்டு போட்டோ மைக்ரோகிராபி விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எறும்பின் முகம் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லிதுவேனியாவைச் சேர்ந்த யுகேனிஜுஸ் கவலியஸ்கஸ் என்ற வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கு பரிசு பெற்று தந்திருக்கும் இந்த சிறிய உயிரினத்தின் புகைப்படம் மனிதர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு திகிலூட்டியுள்ளது.
சிவந்த கண்கள், நீளமான கூறிய பற்களுடன் கோபப்பார்வை பார்க்கும் இந்த எறும்பு புகைப்படம் நிக்கோன் கேமரா மூலம் ஐந்து மடங்கு ஜும் செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.