பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 10 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலையை 62 ரூபாவாலும் உயர்த்த சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் நடவடிக்கை எடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்