7.0 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

பப்புவா நியூ கினியின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை 7.0 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர நகரமான வெவாக்கிலிருந்து 97 கிலோமீற்றர் (60 மைல்) தொலைவில் 62 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நில நடுக்க பகுதிகளில் அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கபடவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மக்கள்தொகை குறைவாக இருந்தாலும், நிலநடுக்க மண்டலத்தில் உள்ள மென்மையான நிலத்தின் தளர்வு அருகிலுள்ள சமூகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் மையம், நியூ கினி தீவில் இந்தோனேசியாவின் எல்லையில் இருந்து கிழக்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.