கொடூரமாக வெட்டிப்படுகொல்லபட்ட நிலையில் வயோதிப தம்பதிகள்

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

அம்பாந்தோட்டை – திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவில் (23.01.2023) நள்ளிரவு வயோதிபர்களான கணவனும், மனைவியும் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் 72 வயதுடைய கணவனும், 69 வயதுடைய மனைவிம் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த நால்வர், வீட்டுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த வயோதிபத் தம்பதியினர் இருவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட வயோதிபத் தம்பதியினரின் மூன்று பிள்ளைகளும் திருமணம் செய்து வெவ்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட வயோதிபத் தம்பதியினர் வீட்டில் தனிமையில் வசித்து வந்தனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கொலைச் சந்தேகநபர்களைத் தேடி மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்