கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் பலி

தினமும் இரவு 10.30 க்கு "நாளை நமதே" - உங்கள் இமை வானொலியில்

கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபத்திலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கிப் பயணித்த பேருந்து வண்டியும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளது
வானின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

வானின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

ஏனைய ஆறு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்