சீனாவில் 10 லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு கண்டுபிடிப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

சீனாவின் ஹியூபே மாகாணத்தில் 10 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் மனித மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த இடத்தில் இருந்து 30 வருடங்களுக்கு முன் 2 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மண்டை ஓடு முழு வடிவில் இருப்பதாகவும், நம்பமுடியாத அளவிற்கு அது பதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.