உலகிலேயே முதன் விமானத்தை பயன்படுத்திய தமிழன் – ஓடுதளம் கண்டுபிடிப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

உலகிலேயே பழமை வாய்ந்த விமான ஓடுதளம் இலங்கையில் அதுவும் தமிழன் பயன்படுத்தியது தமிழ் மன்னன் இராணவன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்று, இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராமாயணத்தில் இராவணன் மன்னனுக்கு புசுபக விமானம் ஒன்று இருந்தாக கூறப்பட்டுள்ளது.

சீதையை மறைத்து வைத்த இடம் எனக் கூறப்படும் நுவரெலியாவில் உள்ள சீதா எலிய பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது. சீதா எலிய கோயில் தற்போது இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

சீதையை கடத்தி வர பயன்படுத்திய புசுபக விமானம், மன்னன் இராவணன் நிறுத்தி ஓய்வெடுத்ததாக கூறப்படும் இடம் ஒன்றில் தோட்டத் தொழிலாளர்கள் பூசைவழிப்பாடு செய்து வருகின்றனர்.

மசுகெலியா, மவுசாகலை நீர்தேக்கம் மற்றும் கெனியோன் நீர் மின் நிலையத்திற்கு மேல் ஐந்து கன்னிமார் மலைக்கு அருகில் மவுசாகலை நய்சா தோட்டத்தின் கீடன் பிரிவில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பிலான கற்பாறையாக இந்த இடம் காணப்படுகிறது.

அந்த கற்பாறையில் சில அடையாளங்கள் காணப்படுகின்றன. அவை மன்னன் இராவணனின் புசுபக விமானத்தின் சில்லுகளின் தடங்கள் என தோட்டத் தொழிலாளர்கள் நம்புகின்றனர்.

மட்டமான இந்த கற்பாறைக்கு அருகில் தடாகம் ஒன்றும் காணப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் இந்த தடாகம் பெயரிதாக காணப்பட்டதாகவும் அது பராமரிக்கப்படாத காரணத்தினால், சிறியதாக மாறியுள்ளது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

மன்னன் இராவணனின் புஷ்பக விமானம் பாத ரசத்தினால் இயங்கியதாக வரலாறு கூறுகிறது. இந்த கற்பாறை சிவனொளி பாதமலைக்கு அருகில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.