இலங்கையில் மீண்டும் 8 மணித்தியால மின்வெட்டு

இன்றைய தினத்திற்குள் (23) நிலக்கரி கொள்வனவினை உறுதிப்படுத்தாவிட்டால், ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் நாளொன்றுக்கு 08 மணி முதல் 10 மணிநேரம் வரை மின் வெட்டுக்கு செல்ல நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அத தெரணவின் ´பிக் ஃபோகஸ்´ நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களிடம் 28ம் திகதி வரை நிலக்கரி கையிருப்பு உள்ளது. பிரச்சனை என்னவென்றால்… 28ம் திகதிக்கு பிறகு நிலக்கரி தீர்ந்துவிட்டால் 3 மின் உற்பத்தி நிலையங்களையும் மூட வேண்டி ஏற்படும். சுமார் 820 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும். 8 முதல் 10 மணித்தியால மின்வெட்டுக்கு செல்ல நேரிடும்… இன்றைய தினம் நமக்குத் தேவையான நிலக்கரியை ஓடர் செய்யாவிட்டால், 5 நாட்களுக்கு ஒருமுறை நிலக்கரி கப்பல் ஒன்று நமக்கு வர வேண்டும்.”

இதேவேளை, நாளை (23ஆம் திகதி) முதல் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

CALL NOW