ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய இளையோர் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

போட்டியின் 33 ஆவது ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இரு அணிகளுக்கும் 38 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய, 38 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் இலங்கை இளையோர் அணி பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் யசிரு ரொட்ரியோ 19 ஓட்டங்களையும், ரவீன் டி சில்வா 15 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் விக்கி ஒஸ்ட்வெல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, டக்வொர்த் லூயிஸ் முறைக்கமைய 99 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 21.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய இளையோர் அணி சார்பில் Angkrish Raghuvanshi ஆட்மிழக்காமல் 56 ஓட்டங்களையும், Shaik Rasheed ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.